2024-09-05 15:44
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை இந்திய திரையுலகம் கொண்டாடித் தீர்க்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் மகாராஜா திரைப்படத்தை ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறார்கள். சினிமா பக்கங்கள், இதழ்கள், பாலிவுட் விமர்சகர்கள், யூடியூபர்கள் என ஒரு தமிழ் சினிமாவை இதுதான்டா இந்திய சினிமா என வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் சினிமா குறித்த எல்லா உரையாடல்களில் இருக்கும் எளிமையும் நேர்மையும் அவரை இன்னமும் உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்.