2024-09-06 14:48
சென்னை MGR நகரில் எனது உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைக்க கேப்டனை அழைத்தேன். விஜய்யும் வருகிறார் என்றேன்.
'தம்பி வர்றாரா? அப்படின்னா கட் அவுட், போஸ்டர்ல எல்லாம் அவர் படத்தை பெருசா போடுங்க' என்றார்.
'என்ன இப்படி சொல்றார்? ஒருவேளை இவர் வரமாட்டாரோ'? என நினைத்தேன். ஆனால் வளர்ந்து வரும் நடிகருக்குதான் அதிக பப்ளிசிட்டி தேவை என அவர் எண்ணியது பிறகுதான் தெரிந்தது.
'கேப்டன் படத்தை பெருசா போடுங்க. எனக்கு விளம்பரம் வேண்டாம். அமைதியா வந்துட்டு போயிடறேன்' என்றார் விஜய்.