2024-12-13 08:49
தொடு வானம்
நிறங்கள் ஊதா என்றே நின்னோடு
கலந்தேன் யான்.
அப்படியாவது உனை தொட்டு தழுவி ஏடுகளில் இடம் பெற மாட்டோமா என்ற எதிர்பார்ப்புடன் கலங்குகின்றேன்.
என் கலக்கத்தை அதிகப்படுத்தவே
கதிரவன் கூட என் மேனியில் பட்டு நிறத்தையும் பிரித்து விட்டானோ...
தூரம் ஒரு பொருட்டல்ல
தென்றலை அண்டினேன் எட்டி பிடிக்கும் தூரத்தில் எனை சேர்த்தான்.
ஆனால்,விதியும் மனிதர்க்கு தான் என்று கர்வம் கொண்டேன்.அதையும் பொய்யாகி விட்டதே உன்னிடம் இருந்து எனை நீங்கலா கிவிட்டு...தொடு வானம் அல்ல நினை தொடாத வானமாக செல்கின்றரேன்.😌