2024-12-31 15:20
பற்றியெறியும் காட்டுத்தீயென
தேகம்முழுக்க பரவியிருக்கும்
உன் நினைவுகள்...
விழிகளுக்குள் ஊடுருவிப்போன
தீப்பொறியின் முதல் தொடக்கம்...
உந்தன் பேரன்பின் அரவணைப்பில்
தீப்பிழம்பாய் நிலைகொண்டுள்ள
என இதயத்தை அணைத்துக்கொள்ள வா..
அணைந்து போகட்டும்
அத்துணை ஏக்கங்களும் தேவைகளும்..