2025-01-02 01:36
அந்நாளில் வானம் உருக்கப்பட்ட உலோகத்தைப் போன்று ஆகிவிடும். மலைகள் சாயம் பூசப்பட்ட கம்பளியைப் போல் ஆகிவிடும். எந்த நண்பனும் மற்றொரு நண்பனை விசாரித்துக் கொள்ள மாட்டான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு மாற்றாகத் தனது பிள்ளைகளையும், மனைவியையும், சகோதரனையும். தன்னை அரவணைத்து வாழ்ந்த உறவினரையும், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து, அது தன்னைக் காப்பாற்ற வேண்டுமெனக் குற்றவாளி விரும்புவான்.
அல் குர்ஆன் - 70 : 8, 9, 10, 11,12,13,14