2025-02-02 13:35
மனைவியின் வற்புறுத்தலை அடுத்து சிறுநீரகத்தை விற்க ஒப்புக் கொண்ட கணவர், சுமார் ஒரு வருட தேடலுக்கு பின், கிட்னியை வாங்கும் ஒருவர் தொடர்பு கிடைக்க, அவரிடம் தனது கிட்னியை சுமார் 10 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
கணவர் குடும்பத்தின் நிலைமையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு இருந்த வேளையில், மனைவிக்கோ பெயிண்டர் ரவி தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கணவர் கிட்னியை விற்ற 10 லட்சத்துடன் பெயிண்டர் ரவி தாஸுடன் எஸ்கேப் ஆகியுள்ளார் மனைவி.
தனது 10 வயது மகளுடன் ரவி தாஸ் வீட்டிற்கு சென்ற கணவர், கதவை தட்டியுள்ளார். ரவியும், அந்த பெண்ணும் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவே இல்லை.
அதுமட்டுமின்றி, உன்னால் செய்ய முடிந்ததை செய், நான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். கணவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்